தகவல் தொழில்நுட்ப உதவியுடன் குற்றவாளிகளை பிடிக்கும் பயிற்சி 5 மாநிலங்களை சேர்ந்த 27 போலீசாருக்கு

வேலூர், நவ.16: தமிழகம், ஆந்திரா உள்பட 5 மாநிலங்களை சேர்ந்த 27 போலீசாருக்கு தகவல் தொழில்நுட்ப உதவியுடன் குற்றவாளிகளை பிடிப்பது தொடர்பான ஒரு வார கால பயிற்சி ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இன்றைய காலக்கட்டத்தில் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கொலை, கொள்ளை, திருட்டு போன்ற சம்பவங்கள் நடக்கிறது. இதில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். தகவல் தொழில்நுட்ப உதவியுடன் குற்றவாளிகள் பயன்படுத்தும் செல்போன் டவர்களின் இடத்தை மாற்றி, மாற்றி தப்பி விடுகின்றனர்.

இந்நிலையில், காவலர்களுக்கு புதிய தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குற்றவாளிகளை பிடிப்பது எப்படி? என்பது குறித்து பயிற்சி வகுப்புகள் நடத்த தகவல் தொழில்நுட்ப பிரிவின் உதவியை நாடியது. அதன்படி, தமிழகம், ஆந்திரா, கேரளா, தெலங்கானா, கர்நாடகம் ஆகிய 5 மாநிலங்களை சேர்ந்த 23 காவலர்களுக்கு ஒரு வார பயிற்சி ஐதராபாத்தில் கடந்த 12ம் தேதி தொடங்கியது. இந்த பயிற்சியில் தற்போது பயன்பாட்டில் உள்ள தகவல் தொழில்நுட்பங்களை கையாளும் முறைகள், குற்றவாளிகளின் செல்போன் தவிர்த்து அவனின் செயல்களை எப்படி டிராக்கிங் செய்வது?,

குற்றவாளிகளின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது, காவலர்கள் பயன்படுத்தும் சிடிஎன்எஸ் பைல்களை கையாளும் முறைகள் குறித்த பயிற்சி கடந்த 12ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. நாளையுடன் இப்பயிற்சி நிறைவடைகிறது. இப்பயிற்சியில் தமிழக காவல் துறை சார்பில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 5 காவலர்கள் உள்பட 7 பேர், கேரளா, ஆந்திர, தெலங்கானா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த காவலர்கள் என மொத்தம் 23 காவலர்கள் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: