×

கரூர் வெங்கமேடு சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள் நடவடிக்கை எடுக்கப்படுமா?

கரூர், நவ.16:  கரூர் வெங்கமேடு சாலையில் ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தம் காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனை கண்காணித்து கரூர் நகராட்சிக்குட்பட்ட சர்ச் கார்னர் பகுதியில் இருந்து வேலூர், மண்மங்கலம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் சாலையில் வெங்கமேடு பகுதி உள்ளது. நகராட்சியில் வளர்ந்து வரும் முக்கிய பகுதிகளில் வெங்கமேடு பகுதியும் ஒன்று. வெங்கமேடு மேம்பால இறக்கத்தில் இருந்து வாங்கப்பாளையம் பிரிவு வரை குறுகிய சாலையான இதில், தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. சாலையின் இருபுறமும் அனைத்து வர்த்தக நிறுவனங்களும் அமைந்துள்ளதால், நிறுவனங்களுக்கு வந்து செல்லும் வாகனங்கள் அனைத்தும் சாலையோரம் நீண்ட நேரம் நின்று செல்கிறது.  இதன் காரணமாக, இந்த சாலையின் வழியாக நகர பேருந்துகள், மினி பேருந்துகள் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் சீராக செல்ல முடியாத அளவுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. அடிக்கடி இதுபோன்ற சம்பவங்கள் இந்த சாலையில் நடைபெற்று வருவதால் அனைத்து தரப்பினர்களும் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை பார்வையிட்டு, நீண்ட நேரம் வாகனங்கள் நிறுத்தம் குறித்து கண்காணித்து சீரமைக்க வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : road ,Karur Wingammedu ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி