×

வாங்கப்பாளையம்-வாங்கல் சாலையில் மெகா பள்ளம்: வாகனங்கள் தடுமாற்றம்

கரூர், நவ.16:  கரூர் நகராட்சிக்குட்பட்ட வாங்கப்பாளையம் வாங்கல் செல்லும் சாலையில் குறிப்பிட்ட இடத்தில் உள்ள மெகா பள்ளம் காரணமாக, அனைத்து வாகனங்களும் தடுமாறிச் செல்கிறது. கரூர் நகராட்சிக்குட்பட்ட வாங்கப்பாளையம் பகுதியில் இருந்து வாங்கல், அரசு காலனி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் சாலை உள்ளது. அதிகளவு வாகன போக்குவரத்து நடைபெறும் சாலைகளில் இந்த சாலையும் ஒன்றாக உள்ளது. இந்நிலையில், இந்த சாலையின் அருகம்பாளையம் கிராமத்துக்கு செல்லும் பிரிவு அருகே சாலையின் மையப்பகுதியில் மெகா பள்ளம் உள்ளது. தார்ச்சாலையில் உள்ள இந்த பள்ளம் காரணமாக, இரவு நேரங்களில் செல்லும் அனைத்து வாகன ஓட்டிகளும் தட்டுத் தடுமாறியே சென்று வருகின்றனர். இந்த பகுதி மட்டுமின்றி, பல இடங்களில் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த சாலையை புதுப்பித்து தருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என பகுதி மக்கள் துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர்.  எனவே, துறை அதிகாரிகள் இந்த பகுதியை பார்வையிட்டு தேவையான சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும்
எதிர்பார்க்கின்றனர்.

Tags : Road ,
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...