×

இணையதளத்தில் வாங்கும் பொருட்களில் குறைபாடு ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும்

கரூர், நவ.16:  இணைய தளத்தில் பொருட்கள் வாங்குவதில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதால் ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும் என வணிகர்கள் வலியுறுத்தியுள்ளனர். கரூரில்  மாவட்ட வர்த்தகம் மற்றும் தொழில் கழகம், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு இணைந்து பொதுக்குழுக்கூட்டம் நூல் வணிகர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.  சங்க தலைவர் வக்கீல் ராஜூ தலைமை வகித்தார். செயலாளர் வெங்கட்ராமன், அறிக்கை வாசித்தார். பொருளாளர் செல்வம், கந்தசாமி, ஆடிட்டர் நல்லுசாமி, தங்கவேல், லோகநாதன், பால்ராஜ், ராஜாமணி பழனிச்சாமி, அருண் கருப்பசாமி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகப்படுத்த ஜனவரி 1 முதல் தமிழக அரசு தடை செய்து முடிவு எடுத்துள்ளது. அதுவரையில் அரசு அதிகாரிகள் எவ்வித சிரமமும் வணிகர்களுக்கு கொடுக்கக்கூடாது. மத்திய அரசானது 2022ம் ஆண்டு வரை காலநீடிப்பு செய்துள்ளதை தமிழகத்திலும் அமல்படுத்த வேண்டும். சொத்து வரியை உயர்த்தி அமல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. குறிப்பிட்ட சதவீதத்தை அதிகப்படுத்தி நிர்ணயம் செய்து மாற்றி அமைக்க வேண்டும். நகராட்சி கடைகளுக்கு கடையின் அளவைப் பொறுத்து ஒரே மாதிரியான வாடகையை நியாயமான முறையில் அமல்படுத்த வேணடும். ஜிஎஸ்டி வரி ஆன்லைன் மூலம் செலுத்தப்பட்டு வருகிறது. வேலை பளு அதிகமாக இருப்பதால் சர்வர் வேலை செய்வதில்லை. இதனால் வர்த்தகர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சரிசெய்ய வேண்டும்.

 ஜிஎஸ்டி 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம் என வகையில் உள்ளது. இதனை 5 சதவீதம், 12 சதவீதம் என்ற வகையில் வணிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் சிரமத்தை குறைக்கும் வகையில் அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசை கேட்டுக்கொள்வது, உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தை அதிகாரிகள் வணிக நிறுவனங்களில் சோதனைசெய்யும்போது முறையாக செய்ய வேண்டும். கடுமையான சரத்துக்களை நீக்கி அமல்படுத்த மத்திய அரசைக் கேட்டுக்கொள்வது, பெட்ரோல், டீசல் வரியை ஜிஎஸ்டி வரம்புக்குள் அமல்படுத்த வேண்டும். பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், பொதுமக்களும், வணிகர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒவ்வொருநாளும் விலை நிர்ணயம் செய்வதை தவிர்த்து 15 நாட்களுக்கு ஒருமுறை நிர்ணயம் செய்யவேண்டும்.  இணைய தளத்தில் பொருட்கள் வாங்குவதில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதால் ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும். சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டை மத்திய அரசு 100 சதவீதம் அனுமதித்துள்ளது. சிறு குறு நடுத்தர உள்நாட்டு வர்த்தகம் அழிந்துபோகும் என்பதால் மறுபரிசீலனை செய்யவேண்டும். திருச்சி-கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலையை 6 வழிச்சாலையாக மாற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருவதை விரைவுபடுத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர மத்திய அரசைக் கேட்டுக்கொள்வது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பால்ராஜ் நன்றி கூறினார்.

Tags :
× RELATED ஆத்ம நேச ஆஞ்சநேயர் கோயிலில் ராம நவமி விழா