கொலையான சிறுமியின் வீட்டிற்கு ஆறுதல் கூற சென்ற 8 பேர் கைது

ஆத்தூர், நவ.16:  ஆத்தூர் அருகே, கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறச்சென்ற புரட்சிகர இளைஞர் முன்னணியினர் 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆத்தூர் அருகே தளவாய்ப்பட்டி கிராமத்தை சேர்ந்த சிறுமி ராஜலட்சுமி, கடந்த 22ம் தேதி அதே ஊரை சேர்ந்த தினேஷ்குமார் என்பவரால் கழுத்தறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில், ராஜலட்சுமியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் செல்வதற்காக, நேற்று தளவாய்பட்டி கிராமத்திற்கு புரட்சிகர இளைஞர் முண்ணனி அமைப்பின் ஈரோடு நிர்வாகி ஜெயபிரகாஷ் தலைமையில் வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து ராஜலட்சுமியின் வீட்டிற்கு விரைந்த ஆத்தூர் போலீசார், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர். அப்போது, அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால், போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக, ஆத்தூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். துக்க வீட்டிற்கு ஆறுதல் கூறிச்சென்ற புரட்சிகர இளைஞர் முன்னணியினரை ேபாலீசார் கைது செய்தது, ஆத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Related Stories: