×

சேவை குறைபாடு உடற்பயிற்சி சாதன நிறுவனத்திற்கு அபராதம்

கோவை,நவ.16: சேவை குறைபாடு காரணமாக உடற்பயிற்சி சாதன நிறுவனத்திற்கு அபராதம் விதித்து கோவை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கோவை கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன், இவர் கடந்த 2012ல் பெங்களூரை சேர்ந்த உடற்பயிற்சி சாதனம் செய்யும் நிறுவனத்திடம் இருந்து உடற்பயிற்சிக்கான சாதனத்தை ரூ. 38 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியுள்ளார். பின் வாங்கிய சிறிது நாட்களில் சாதனம் பழுதானது. சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் கார்த்திகேயன் கேட்ட போது பழுதானதை சரிசெய்ய மேலும் 20 ஆயிரம் ரூபாய் வாங்கியுள்ளனர். பின் மீண்டும் சாதனத்தில் பழுது ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து நிறுவனத்திடம் கேட்ட போது உரிய பதில் இல்லாததால் கார்த்திகேயன் கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த நுகர்வோர் ஆணைய தலைவர் பாலசந்திரன், உறுப்பினர் அமுதம், ஆர்.பி.பிரபாகர் ஆகியோர் சேவை குறைபாடு காரணமாக மனுதாரர் செலுத்திய ரூ. 58 ஆயிரம் ரூபாயை 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும், மன உளைச்சலுக்கு ரூ. 15 ஆயிரம், வழக்கு செலவுக்கு ரூ.2500ம் நிறுவனம் வழங்க உத்தரவிட்டனர்.

Tags :
× RELATED சிறை மெகா அதாலத்தில் 16 கைதிகள் விடுதலை