எஸ்பி., கடும் அதிருப்தி பெருந்துறை தனிப்பிரிவு போலீசார் இடமாற்றம்

பெருந்துறை. நவ.16: ஈரோடு மாவட்டம் பெருந்துறை சரகத்தில் உள்ள வெள்ளோடு மற்றும் பெருந்துறை காவல் நிலைய தனிப்பிரிவு போலீசார் மற்றும் எஸ்.ஐ., ஆகியோரை எஸ்பி அதிரடியாக இடமாற்றம் செய்து உத்தரவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்ட எஸ்.பி., யாக சக்திகணேஷ் பொறுப்பேற்றது முதல் ஒருநம்பர் லாட்டரி, கள்ள மது, கஞ்சா விற்பனை போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் இதனை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்த நிலையில் தற்போது இவை மீண்டும் தலையெடுக்க துவங்கியுள்ளது. இதனால் பொதுமக்களிடம் இருந்து ஏராளமான புகார்கள் எஸ்.பி., யின் வாட்ஸ்அப் எண்ணுக்கு ஆதரங்களுடன் அனுப்பபட்டு வருகிறது.

மேலும் இதனை கண்காணித்து எஸ்பியிடம் கூற வேண்டிய தனிப்பிரிவு போலீசாரும் உரிய நேரத்தில் தகவல் அளிப்பதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. மேலும் ஒரு சில புகார்களை எஸ்.பி தனிப்பிரிவு போலீசாரிடம் விசாரித்தாலும் கூட, அதுகுறித்த முழு விபரம் அளிப்பதில்லை. இந்நிலையில்,கடந்த வாரம் வெள்ளோடு காவல் நிலைய தனிப்பிரிவு காவலர் ராஜேந்திரன் திடீரென ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார், இதனை தொடர்ந்து நேற்று பெருந்துறை தனிப்பிரிவு காவலர் ஜீவா மற்றும் தனிப்பிரிவு எஸ்.ஐ ரவி ஆகியோர் பணியில் இருந்து சிறப்பு உதவி ஆய்வாளர்களாக காவல்நிலைய பணிக்கு மாற்றப்பட்டனர். மேலும் பெருந்துறை சரக தனிப்பிரிவு எஸ்.ஐ தங்கவேலு மற்றும் தனிப்பிரிவு காவலர் சுந்தரம் மாற்றப்பட்டனர். இதனால் ஈரோடு மாவட்டத்திற்கும் பணி புரிந்து வரும் தனிப்பிரிவு காவலர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.

Related Stories: