×

முசிறியில் சிறப்பு சுகாதார விழிப்புணர்வு முகாம்

தா.பேட்டை, நவ.15: முசிறி பேரூராட்சியில் சுகாதார விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு முசிறி ஆர்டிஓ ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். தாசில்தார் சுப்ரமணியன், செயல் அலுவலர் தேவதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் சுற்றுச்சூழலை சுத்தமாக பராமரிப்பது, சுகாதாரமான சூழ்நிலையில் வாழ்வது குறித்து அறிவுறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து கை கழுவும் முறை, நிலவேம்பு குடிநீரின் பயன்பாடு மற்றும் தயாரிக்கும் முறை மற்றும் முசிறி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி குழந்தைகளுக்கு விழிப்புணர்வு மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முகாமில் சித்த மருத்துவ அலுவலர் சங்கீதா மற்றும் பேரூராட்சி அலுவலர்கள், வருவாய் துறையினர், சுகாதார துறையினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்டிஓ ரவிச்சந்திரன் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார்.

Tags : Special Health Awareness Camp ,Musiri ,
× RELATED முசிறி கிளை நூலகத்தில் குழந்தைகளுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சி