திருச்சி விமானநிலையத்தில் ரூ.38 லட்சம் தங்கம் பறிமுதல்

திருச்சி, நவ.15: திருச்சி விமானநிலையத்தில் ரூ.38 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் சிக்கியது. தொடர்பாக 3 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது. திருச்சி விமான நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவு மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து வந்த ஏர் ஏசியா விமானத்தில் சிலர் தங்கம் கடத்தி வருவதாக, திருச்சி விமான நிலைய சுங்கத்துறை கமிஷனர் அசோக்குக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கமிஷனர் அசோக் உத்தரவின் பேரில், திருச்சி சுங்கத்துறையின் வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் பயணிகளிடம் சோதனை மேற்கொண்டனர். இதில், சென்னையை சேர்ந்த ரியாஸ் அகமது, ஜாகிர் உசேன், அன்சாரி ஆகியோரிடம்  சோதனை நடத்தியதில், மலவாய் மற்றும் கால் பாதங்களில் 1.800 கிலோ கருப்பு நிற பேஸ்ட் (கெட்டியான பசை) வடிவிலான உருண்டைகள் இருந்தை கண்டறிந்தனர். அவற்றை கைப்பற்றி பிரித்தெடுத்ததில், ரூ.38 லட்சம் மதிப்பிலான 1.250 கிலோ எடையிலான 24 கேரட் சுத்தத் தங்கம் சிக்கியது. இதுபோல பேஸ்ட் வடிவத்தில் தங்கத்தை கடத்தி வந்தால் மெட்டல் டிடெக்டர் உதவியால் கூட அவற்றை கண்டுபிடிக்க முடியாது. ஆனால் இப்படி கடத்தி வந்த தங்கத்தை சாமர்த்தியமாக கைப்பற்றிய வான் நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகளை கமிஷனர் அசோக் பாராட்டினார்.

Related Stories: