ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் மருத்துவ பரிசோதனை

திருச்சி, நவ.15: திருச்சி மன்னார்புரம் ராணுவ பயிற்சி மையத்தில்  ஆள் சேர்ப்பு நேற்றுமுன்தினம் தொடங்கியது. 57பொதுப்பணித்துறை சிப்பாய்கள், 1சிப்பாய் எழுத்தர், 1 சலவை தொழிலாளி ஆகிய பணியிடங்களுக்கான தேர்வில் பங்கேற்க தமிழகம், வௌி மாநில இளைஞர்களுக்கு கடந்த மாதம் அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
முதல் நாளான கடந்த 12ம் தேதி தமிழகத்தில் உள்ள 15க்கும் அதிகமான மாவட்டங்களை சேர்ந்த 7ஆயிரம் இளைஞர்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு அடுத்தடுத்த தேர்வுகள் நடத்தப்பட்டதில் 169பேர் தேர்வானார்கள். இதனைத் தொடர்ந்து 2வது நாள் 14மாநிலங்களில் இருந்து 2ஆயிரம் இளைஞர்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு அடுத்தடுத்த தேர்வுகள் நடத்தப்பட்டதில், 135 பேர் தேர்வானார்கள்.

முதல்நாள் தேர்வான 169பேர், 2வது நாள் தேர்வான 135பேர் என மொத்தம் 304 பேருக்கு நேற்று 2வது நாளாக மருத்துவ பரிசோதனை நடந்தது. தொடர்ந்து 17ம் தேதி வரை நடை பெற உள்ளது. இதில் ேதர்வானவர்கள் எத்தனை பேர் எழுத்து தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர் என அன்று அறிவிப்பு வெளியிடப்படும். அதனைத் தொட ர்ந்து எழுத்து தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்பட உள்ளன.

× RELATED டான்செட் நுழைவுத் தேர்வு மே 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்