உறையூர் நாச்சியார் கோயிலில் 24ம் தேதி ஊஞ்சல் திருவிழா தொடக்கம்

திருச்சி,நவ.15: உறையூர் நாச்சியார் கோயிலில் வரும் 24ம்தேதி ஊஞ்சல் திருவிழா தொடங்குகிறது. ரங்கம் ரங்கநாதர் கோயிலின் உபகோயிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோயில் திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற தலமாகும். வைணவ திவ்ய தேசங்கள் 108ல் இரண்டாவதாக போற்றப்பட்டு வருகிறது. இங்கு நாச்சியார் ஊஞ்சல் திருநாள் எனப்படும் டோலோத்சவம் வரும் 24ல் தொடங்கி 30 வரை நடக்கிறது. ஊஞ்சல் திருநாளையொட்டி 24 முதல் 29ம் தேதி வரை தினமும் மாலை 6 மணிக்கு தாயார், மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி மாலை 6.15 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தை அடைகிறார். மாலை 6.30 மணிக்கு அலங்காரம் அமுது செய்யப்படும்.மாலை 6.45 மணி முதல் 7.15 வரை திருவாராதனம், வெள்ளிச்சம்பா அமுது செய் தல் நடை பெறும். இரவு 7.15 மணி முதல் 8 மணி வரை ஊஞ்சல் கண்டரு ளலும், 8 மணி முதல் 8.15 மணி வரை பொது ஜன சேவையுடன் தீர்த்த கோஷ்டியும் நடைபெறும்.

இரவு 8.30 மணிக்கு தாயார் ஊஞ்சல் மண்டபத்தில் இருந்து புறப்பாடாகி 8.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார். 30ம் தேதி சாற்று முறையாகும். அன்றைய தினம் மாலை 6 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகும். தாயார் மாலை 6.15 மணிக்கு ஊஞ்சல் மண்டபம் சென்றடைவார். மாலை 6.30 மணிக்கு அலங்காரம், அமுது செய்தலும், 6.45 மணி முதல் 7.15 மணி வரை திரு வாராதனம், வெளிச்சம்பா அமுது செய்தலும், 7.15 மணி முதல் 8 மணி வரை ஊஞ்சல் கண்டருளலும், இரவு 8 மணி முதல் 8.15 மணி வரை பொதுஜன சேவை யுடன் தீர்த்த கோஷ்டியும் நடை பெறும். இரவு 9.30க்கு தாயார் ஊஞ்சல் மண்டபத்தில் இருந்து பல்லக்கில் புறப்பட்டு 9 மணிக்கு உள்பிரகாரம் வலம் வந்து பல்லக்குடன் மூலஸ்தானம் சென்றடைகிறார்.

Related Stories: