வயலூர் முருகன் கோயிலில் திருக்கல்யாண உற்வசம்

திருச்சி, நவ.15:  வயலூர் முருகன் கோயிலில் கந்தகஷ்டி விழாவை முன்னிட்டு நேற்று முருகன்-தேவசேனா திருக்கல்யாணம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருச்சி வயலூர் முருகன் கோயிலில் கந்தசஷ்டி உற்சவம் கடந்த 8ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் முருகப்பெருமான் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்றுமுன்தினம் இரவு நடந்தது. பின்னர் வள்ளி தேவசேனா சமேத முத்துக்குமார சாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவின் நிறைவுநாளான நேற்றிரவு 7 மணியளவில் முருகன்- தேவசேனா திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

× RELATED தீயணைப்புத்துறை சார்பில் சமயபுரம் கோயிலில் தீத்தடுப்பு செயல்விளக்கம்