கீழவாசல் மீன் மார்க்கெட்டில்

தஞ்சை, நவ. 15:   தஞ்சை கீழவாசல் மீன் மார்க்கெட்டிற்கு மீன் வாங்க வரும் பெண்களை மிரட்டி  வாகன கட்டணம் அதிகமாக வசூல் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென  கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சை கீழவாசல் மீன் மார்க்கெட்டுக்கு  தினம்தோறும் ஏராளமான பெண்கள் இருசக்கர வாகனத்தில் வந்து தங்களது  வீடுகளுக்கு தேவையான மீன்கள், நண்டுகளை வாங்கி செல்கின்றனர். இவ்வாறு மீன்  மார்க்கெட்டுக்கு இருசக்கர வாகனத்தில் வரும் பெண்களை ஒரு சிலர் மிரட்டி  வாகன கட்டணம் வசூல் செய்கின்றனர். மீன் மார்க்கெட்டுக்கு இருசக்கர  வாகனத்தில் வருவோர்களிடம் கட்டணம் ரூ.5 வசூல் செய்ய வேண்டும். ஆனால் ஒரு  சிலர் சமூகவிரோத கும்பல் ரூ.10 கட்டணம் வசூல் செய்கின்றனர். கட்டணம்  செலுத்தவில்லை என்றால் வாகனங்களின் சக்கரத்தில் உள்ள காற்றை பிடுங்கி  விடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே மீன் மார்க்கெட்டுக்கு  வருவோர்களிடம் தடாலடியாக அதிக கட்டணம் வசூல் செய்வோர் மீது நடவடிக்கை  எடுக்க வேண்டுமென பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: