சுகாதார சீர்கேட்டை கண்டித்து பூதலூரில் 19ம் தேதி ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளி, நவ. 15:  பூதலூர் மக்கள் உரிமை கூட்டமைப்பு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. செயலாளர் மகேந்திரன் தலைமை வகித்தார். முன்னாள் செயலாளர் புண்ணியமூர்த்தி வரவேற்றார். கூட்டத்தில் பூதலலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சுகாதார சீர்கேட்டை கண்டிப்பது, பூதலூர் நால்ரோடு பகுதியில் ரவுண்டானா மற்றும் மழைநீர் வடிகால் கட்டும் பணிகள் 6 மாதங்களுக்கு மேல் ஆமை வேகத்தில் நடப்பதை கண்டித்து வரும் 19ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது.

Advertising
Advertising

பூதலூர் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் தலைமை மருத்துவர், போதுமான மருத்துவர்கள் நியமிக்காததை கண்டித்தும், தேவையான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படாததை கண்டித்தும், புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடம் 6 மாதங்களாக திறக்கப்படாததை கண்டித்தும் விரைவில் ஆர்பாட்டம் நடத்துவது. செப்டம்பர் 17ம் தேதி நடந்த பேச்சுவார்த்தையில் ரயில்வே நிர்வாகம் ஏற்று கொண்ட கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த கோருவது. சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க ஊராட்சி மற்றும் ஒன்றிய அலுவலர்களை கேட்டு கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டமைப்பு தலைவர் பழ.ராஜ்குமார் நன்றி கூறினார்.

Related Stories: