தஞ்சை காமராஜர் மார்க்கெட்டில் 2 மாதங்களாக அகற்றப்படாமல் குவிந்து கிடக்கும் காய்கறி கழிவுகள்

தஞ்சை,  நவ. 15:  தஞ்சை காமராஜர் மார்க்கெட்டில் கடந்த 2 மாதமாக அகற்றப்படாமல்  குவிந்து கிடக்கும் காய்கறி கழிவுகளால் ஏற்படும் துர்நாற்றத்தால்  பொதுமக்கள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தஞ்சை காமராஜர்  மார்க்கெட் மிகவும் பிரதானமான மார்க்கெட் ஆகும். இந்த மார்க்கெட்டுக்கு  திருச்சி மார்க்கெட்டில் இருந்து காய்கறிகள், வெங்காயம், வாழைப்பழம் வரும்.  இங்கிருந்து தான் மற்ற இடங்களுக்கு காய்களை வாங்கி சென்று விற்பனை  செய்வர். இவ்வாறு மிகவும் பிரதானமாக காமராஜர் மார்க்கெட்டில் கடந்த 2  மாதமாக காய்கறி கழிவுகள் அகற்றப்படாமல் தேங்கி கிடக்கிறது. இதனால்  கொசுக்கள் உற்பத்தியாகி நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.

டெங்கு கொசுப்புழு  உற்பத்தியாவதை தடுக்க ஆய்வு செய்யும் கலெக்டர், இந்த பகுதியை ஒரு தடவை கூட  ஆய்வு செய்தது இல்லை. மாநகராட்சியில் இருந்து குப்பைகளை அள்ளி செல்ல  ஊழியர்கள் வருவதும் இல்லை. இவ்வாறு காய்கறி கழிவுகள் தேங்குவதால்  மார்க்கெட்டுக்கு பொருட்கள் வாங்க வருவோர்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே  மார்க்கெட்டில் தேங்கியுள்ள காய்கறி கழிவுகளை தினம்தோறும் அகற்ற வேண்டும்  நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

துர்நாற்றத்தால் மக்கள், வியாபாரிகள் அவதி தஞ்சை காமராஜர் மார்க்கெட்டில் அள்ளப்படாமல் மாலைபோல் குவிந்து கிடக்கும் காய்கறி கழிவுகள்.

Related Stories: