×

வீரபாண்டி வட்டாரத்தில் வயல் சூழல் ஆய்வு குறித்த பயிற்சி முகாம்

ஆட்டையாம்பட்டி, நவ.15: வீரபாண்டி வட்டாரத்தில் அட்மா திட்டத்தின் கீழ், பாப்பாரப்பட்டி கிராமத்தில் நெற்பயிரில் வயல் சூழல் ஆய்வு குறித்த பண்ணைப்பள்ளி பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இந்த வகுப்பில் 25 விவசாயிகள் 5 குழுக்களாக பிரிந்து, நெல் வயலில் பயிரின் நிலைகள், பூச்சிகள் மற்றும் நோய் தாக்கிய இலைகளை சேகரித்து வந்து, அதில் ஒரு பக்கத்தில் நன்மை செய்யும் பூச்சிகளான சிலந்தி, ஊசி தட்டான், பொறி வண்டுகளை வரைந்தனர். தீமை செய்யும் பூச்சிகளான இடைப்பேன், இலை சுட்டுப்புழு ஆகியவற்றை மற்றொரு பக்கத்திலும் வரைந்து பூச்சிகளின் எண்ணிக்கையை கணக்கிட்டனர்.

மேலும், வயல்களில் தண்ணீர் வடித்து பஞ்சகவ்யா தெளிக்கவும், வரப்பு பயிராக தட்டப்பயிறு மற்றும் மக்காச்சோளம் சாகுபடி செய்யவும் பரிந்துரைக்கப்பட்டது. முகாமில் ஓய்வு பெற்ற வேளாண் இணை இயக்குனர் பழனியப்பன் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு பயிற்சியளித்தார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் ராஜேந்திரன், சரஸ்வதி, தீபன்முத்துசாமி ஆகியோர் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


Tags : Training camp ,Veerapandi ,
× RELATED மண்டல அலுவலர்களுக்கு தேர்தல் பயிற்சி முகாம்