×

ஓமலூர் வட்டார விவசாயிகள் சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்ய அழைப்பு

ஓமலூர், நவ.15: சேலம் மாவட்டத்தில் 2018ம் ஆண்டில் சம்பா நெல்  பயிரிட்டுள்ள விவசாயிகள், பிரதமரின் பயிர் காப்பிடு திட்டத்தின் கீழ், தங்களது பயிரை காப்பீடு செய்து கொள்ள அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நெல் பயிரிட்டுள்ள விவசாயிகள், ஒரு ஏக்கருக்கு காப்பீடு பிரீமியம் தொகையாக ₹435ஐ  வரும் 30ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். இதன் மூலம் விவசாயிகளுக்கு  இழப்பீடாக ஏக்கருக்க ₹29 ஆயிரம் கிடைக்கப்பெறும். சோழமண்டலம் எம்.எஸ். பொது  காப்பீடு நிறுவனம் மூலம் செயல் படுத்தப்பட்டு வருகிறது. எனவே, விவசாயிகள்  அந்தந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக வங்கிகள் மற்றும்  பொது சேவை நிறுவனங்கள் மூலமாக காப்பீடு செய்து, இயற்கை இடர்பாடுகளால்  இழப்பு ஏற்படும் போது காப்பீடு தொகை பெற்று பயன்பெறலாம். இத்தகவலை கலெக்டர் ரோகிணி  தெரிவித்துள்ளார்.

Tags : Omalur ,Samba ,
× RELATED ஓமலூர் ஆட்டுச் சந்தையில் ஆடுகள் வரத்து குறைந்த நிலையில் விற்பனை சரிவு!!