×

போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள அதிமுக கொடிக்கம்பத்தை அகற்ற சென்னை ஐகோர்ட்டில் வழக்கு

சேலம், நவ.15:சேலத்ைத அடுத்த பூலாவரி பஸ் ஸ்டாப்பில், கடந்த மாதம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, புதிதாக அமைக்கப்பட்டிருந்த அதிமுக கொடிக்கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றி வைத்துச் சென்றார். இந்த கம்பம் போக்குவரத்துக்கு இடையூறாக உaள்ளதாகவும், இதை அகற்ற வேண்டும் எனவும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர். மேலும் இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம்,  இந்த வழக்கு விசாரணையை 15ம் தேதிக்கு தள்ளி வைத்தும், சம்பந்தப்பட்ட கொடிக்கம்பத்தை 15ம் தேதி (இன்று) வரை பயன்படுத்த கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது.  
 
இந்நிலையில், நேற்று பூலாவரி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயபாபுவை சந்தித்து மனு அளித்தனர். அதில், பூலாவரி பஸ் ஸ்டாப்பில் உள்ள அதிமுக கம்பத்தை வரும் 15ம் தேதி வரை பயன்படுத்த தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, போக்குவரத்துக்கு இடையூறாகவும், ஆபத்தை விளைவிக்கும் வகையிலும் உள்ள கம்பத்தை அகற்ற வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தனர்.

Tags : Chennai High Court ,AIADMK ,
× RELATED தபால் வாக்குப் பதிவு நடைமுறை தொடங்கி...