சபரிமலை சீசனையொட்டி சென்னையில் இருந்து கேரளாவுக்கு சேலம் வழியே சிறப்பு ரயில்கள்

சேலம், நவ. 15: சென்னையில் இருந்து கேரளாவுக்கு சேலம் வழியே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. கார்த்திகை மாதத்தில் சபரிமலையில் மண்டல பூஜை நடக்கிறது. இதனால், பக்தர்கள் மாலை அணிந்து பல்வேறு பகுதிகளில் இருந்து சபரிமலை தரிசனத்துக்கு வருவார்கள். இதனால், பக்தர்கள் கூட்ட நெரிசலை தவிரிக்கும் வகையில், சென்னையில் இருந்து கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. தாம்பரம்- கொல்லம் (06027) இடையே ஜனவரி 2,4,7,9,16,18 மற்றும்  21,23,25ம் தேதிகளில் இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில், தாம்பரத்தில் மாலை  5.15 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 5.55 மணிக்கு கொல்லத்துக்கு  சென்றடையும்.  

கொல்லம்- தாம்பரம் (06028) இடையே ஜனவரி  3,5,8,10,12,22,24,26ம் தேதிகளில் இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில்  கொல்லத்தில் காலை 11.30 மணிக்கு புறப்பட்டு மறு நாள் காலை 3.30 மணிக்கு  தாம்பரத்துக்கு சென்டறையும். கொல்லம் - சென்னை சென்ட்ரல்(06048) இடையே சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் டிசம்பர் 4,6,11,13,18,20,27  மற்றும் ஜனவரி 3,8, 10ம் தேதிகளில் மதியம் 3 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு, அடுத்த நாள் காலை 9.45 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு  சென்றடையும்.

இதேபோல், சென்னை சென்ட்ரல்- கொல்லம்(06047) இடையே டிசம்பர் 3,5,10,12,17,19,24,26,31 மற்றும் ஜனவரி 2,7,9,14ம் தேதிகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில்,  சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 12 மணிக்கு கொல்லத்தை அடையும். இந்த சிறப்பு ரயில்கள், காட்பாடி, ேஜாலார்ப்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், ேகாட்டயம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. இத்தகவலை சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories: