ஐப்பசி வளர்பிறை முகூர்த்தம் சேலம் கோயில்களில் நூற்றுக்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம்

சேலம், நவ.15: ஐப்பசி வளர்முறை முகூர்த்தத்தையொட்டி, சேலம் மாவட்ட கோயில்களில் நூற்றுக்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. ஐப்பசி, கார்த்திகை மாதத்தில் பத்துக்கும் மேற்பட்ட முகூர்த்த நாட்கள்  வருகின்றன. தீபாவளிக்கு பிறகு வந்த வளர்பிறை முகூர்த்தத்தில் திருமணம் செய்ய கோயில், திருமணம் மண்டபங்களில் ஏராளமானோர் முன்பதிவு செய்திருந்தனர். நேற்று ஐப்பசி மாத கடைசி வளர்பிறை முகூர்த்தம் என்பதால், சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் அதிகாலை முதலே திருமண கோஷ்டியினரின் கூட்டம் அலைமோதியது. இதேபோல் சேலம் கோட்டை ெபருமாள் கோயிலிலும் திருமண கோஷ்டியினரின் கூட்டம் இருந்தது. சுகவனேஸ்வரர் கோயிலில் 18 ஜோடிகளுக்கும், கோட்டை பெருமாள் கோயிலில் 7 ஜோடிகளுக்கும் திருமணம் நடந்தது. இதேபோல் தாரமங்கலம் கைலாசநாதர் கோயில், பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயில், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோயில் உள்பட சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் நூற்றுக்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.

Related Stories: