×

மருத்துவமனை சாலையில் அபாயகர மரங்கள் வெட்டி அகற்றம்

ஊட்டி, நவ. 15:  ஊட்டி அரசு மருத்துவமனை சாலையில் இருந்த அபாயகரமான மரங்கள் வெட்டி அகற்றும் பணிகள் நேற்று மேற்கொள்ளப்பட்டது.
 நீலகிரி மாவட்டத்தில் பருவமழை சமயங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்புகள், குடியிருப்பு சேதமடைதல் போன்ற இடர்பாடுகள் ஏற்படுகின்றன. சில சமயங்களில் அபாயகரமான மரங்கள் விழுந்து உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இந்நிலையில் தென்மேற்கு பருவமழையின் போது மரம் விழுந்ததில் 3 பேர் பலியானார்கள்.

தொடர்ந்து அபாயகரமான மரங்களை வெட்டி அகற்ற மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது. இதையடுத்து குடியிருப்பு பகுதிகள், பள்ளி, கல்லூரிகளுக்கு அருகாமையில் உள்ள அபாயகரமான மரங்களை வெட்டி அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.  இதனிடையே ஊட்டி அரசு மருத்துவமனை சாலையில் வளர்ந்து காணப்பட்ட சுமார் 4க்கும் மேற்பட்ட அபாயகரமான மரங்கள் மற்றும் மரக்கிளைகளை வெட்டி அகற்றும் பணிகள் துவக்கப்பட்டு நடக்கிறது.

Tags : hospital road ,
× RELATED திருட்டு வழக்கில் விரைந்து குற்றவாளியை பிடித்த போலீசாருக்கு பாராட்டு