×

தார் சாலை அமைக்க கோரிக்கை

பந்தலூர், நவ. 15 : பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சி பகுதியில் கையுன்னி வெளக்கலாடி, கர்க்கபுரா, வண்ணாத்திவயல், சூரத் வரை உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இங்கு ஏராளமான பொதுமக்கள் வசிக்கின்றனர்.   இங்குள்ள கையுன்னி வௌக்கலாடி பகுதியில் உள்ள 2 கிமீ மண் சாலையில் கற்கள் பதித்து பயன்படுத்தி வருகின்றனர். தற்போது கற்கள் பெயர்ந்து குண்ம் குழியுமாக சாலை காட்சியளிக்கிறது.  தார் சாலை அமைக்காததால் அவசர மருத்துவ சிகிச்சை பெற பொதுமக்கள் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் மருத்துவமனை செல்ல முடியாமல் பாதிக்கப்படுகின்றனர்.  எனவே பழுதான இச்சாலைைய தார்சாலையாக மாற்றித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : tar road ,
× RELATED தோகைமலை அருகே தார் சாலையை...