×

ஈரோடு அரசு பள்ளியில் கேஜி வகுப்புகள் துவக்கம்

ஈரோடு, நவ. 15: ஈரோட்டில் கேஜி வகுப்புகள் துவங்கப்பட்டு, தற்போது 10 மாணவிகள் சேர்க்கை நடைபெற்று உள்ளது.தமிழக அரசு இந்த ஆண்டு மாநிலம் முழுவதும் மாவட்டத்திற்கு ஒரு மாதிரி பள்ளியை அறிவித்துள்ளது. தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளியில் மாணவ-மாணவிகள் சேர்க்கையினை அதிகரிக்க அரசு தீவிர முயற்சிகள் எடுத்து வருகிறது.  இதில் ஈரோட்டில் காந்திஜி ரோட்டில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை மாதிரி பள்ளியாக அரசு தேர்வு செய்துள்ளது. இந்த பள்ளியில் கடந்த 1ம் தேதி முதல் கேஜி வகுப்புகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் 10 மாணவிகள் முதற்கட்டமாக சேர்க்கை நடைபெற்று உள்ளது. இவர்களுக்கு பயிற்சி அளிக்க அரசு சார்பில் தேர்வு செய்யப்பட்ட ஒரு ஆசிரியை மற்றும் பள்ளியால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு ஆசிரியை என 2 ஆசிரியைகள் மாணவிகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.

காலை 9.30 மணி வரை மதியம் 3 மணி வரை வகுப்புகள் நடைபெறுகிறது.  கேஜி வகுப்பு மாணவிகளுக்கு கற்றல் திறனை எளிமைப்படுத்தும் விதமாக 25 வகையான கற்பித்தல் முறை நடைமுறைப்படுத்தி பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஆங்கில முறையில் மட்டுமே பாடங்கள், கதைகள் அரசு உத்தரவின் பேரில் கற்பிக்கப்படுகிறது. மேலும் குழந்தைகள் பள்ளிக்கு வருவதை தூண்டும் வகையில் கேஜி வகுப்பு அமைந்துள்ள கட்டிடத்தின் அனைத்து பகுதிகள் மற்றும் வகுப்பறையின் சுவற்றில் விதவிதமான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

Tags : Gegi ,Erode Government School ,
× RELATED ஈரோடு அரசு பள்ளியில் நெகிழி...