கோபி அருகே ஆறுமுகசாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவ விழா

கோபி, நவ. 15:கோபி அருகே  வேலுமணி நகரில் சத்திவிநாயகர் கோவில் வளாகத்தில் ஆறுமுகசாமி கோவில் உள்ளது. இக்கோயிலில் தினமும் கணபதியாகம், செவ்வாய்கிழமை சத்ருசம் ஹார திரிசதை அர்ச்சனை, வியாழன் குரு, பிரம்மா, தட்சிணா மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், வெள்ளிகிழமை துர்க்கைக்கு லலிதாதிரிசதை அர்ச்சனை, சனிக்கிழமை பெருமாள் மற்றும் சனீஸ்வரனுக்கு சிறப்பு பூஜை, உலக நன்மைக்காக வளர்பிறை பஞ்சமி திதியில் ஆயுள் ஹோமம், வளர்பிறை சஷ்டியில் மகா குமார யாகம் நடைபெறுகிறது.

 மேலும்    கிருத்திகை அன்று சத்ருசம்ஹார யாகம், பவுர்ணமி அன்று துர்க்கைக்கு சிறப்பு பூஜையும், மகாவிஷ்ணுவிற்கு சத்தியநாராயண பூஜையும், அமாவாசை, சங்கடஹரசதூர்த்தி அன்று விநாயகருக்கு சிறப்பு பூஜையும், தமிழ்மாத முதல் ஞாயிறு, நவகிரஹத்திற்கு சிறப்பு ஹோமம் மற்றும் அபிஷேகம் என இந்து மதத்தில் உள்ள அறு சமய வழிபாடு முறைகளாக சைவம், வைணவம், கவுமாரம், கானாபத்தியம், சாக்தம், சவுரம் முறைப்படி மாதத்திற்கு 54 சிறப்பு பூஜை நடக்கிறது.  திருமணம், குழந்தை பேறுக்காக கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்ற நாள் முதலே நாள்தோறும் யாகபூஜை நடைபெற்று வருகிறது.   இந்நிலையில் இக்கோவிலில் கந்த சஷ்டி விழா 6ம் நாளான நேற்று முன்தினம் சூரசம்ஹாரம் நடந்தது. நேற்று ஆறுமுகசாமிக்கு வள்ளி , தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது.

Related Stories: