×

விராலிமலை சட்டமன்ற தொகுதி திமுக செயல்வீரர்கள் கூட்டம்

புதுக்கோட்டை, நவ.15:  புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதி திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. திமுக துணை பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் கலந்து கொண்டார். புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட விராலிமலை சட்டமன்ற தொகுதி திமுக செயல்வீரர்கள் கூட்டம் விராலிமலை வி.ஏ.கமலாலயா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட பொறுப்பாளர் செல்லப்பாண்டியன் தலைமை வகித்தார். விராலிமலை மேற்கு ஒன்றிய செயலாளர் இளங்குமரன் வரவேற்றார். திமுக துணை பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சுப்புலெட்சுமி ஜெகதீசன், மாநில இளைஞரணி துணை செயலாளர் சுபா.சந்திரசேகரன் ஆகியோர் ஆலோசனைகள் வழங்கி சிறப்புரையாற்றினர். புதுக்கோட்டை தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள்  அமைச்சருமான ரகுபதி எம்.எல்.ஏ, திமுக சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினர் சந்திரசேகரன், மாவட்ட பொருளாளர் செந்தில், மாவட்ட துணைச் செயலாளர் ராஜேஸ்வரி, தலைமை செயற்குழு உறுப்பினர் சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் சத்தியசீலன், மாரிமுத்து, வெங்கடாச்சலம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சண்முகம், தென்னலூர் பழனியப்பன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பொதுக்குழு உறுப்பினர் ராமசாமி நன்றி கூறினார்.

Tags : Vilalimalai ,assembly ,DMK ,activists ,
× RELATED அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 68.80 சதவீதம் வாக்கு பதிவு