×

புதுக்கோட்டையில் நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

புதுக்கோட்டை, நவ.15: புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நாளை நடைபெறுகிறது.  புதுக்கோட்டை மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கோடு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (16ம் தேதி) புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. இம்முகாமில் பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இந்த வேலைவாய்ப்பு முகாமில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு முதல் பட்டபடிப்பு வரை கல்வித் தகுதியுடைய வேலைநாடுனர்கள் பங்கேற்று பயனடையலாம் என்று மாவட்ட கலெக்டர் கணேஷ் தெரிவித்துள்ளார்.

Tags : job camp ,Pudukottai ,
× RELATED மக்காச்சோளம் சாகுபடியில் படைப்புழுவை கட்டுப்படுத்த கோடை உழவு அவசியம்