×

ஈரோடு- கரூர் ரயில் பாதையில் பாலம் அமைக்கும் பணி 20, 27ம் தேதிகளில் மாற்று வழியில் ரயில்கள் இயக்கம்

கரூர்,நவ. 15: ஈரோடு- கரூர் ரயில் பாதையில் பாலம் அமைக்கும் பணிகள் நடைபெறுவதால் வரும் 20ம்தேதிமற்றும் 27ம்தேதி ஆகிய இரண்டு நாட்களில் ரயில்கள் தடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
20ம்தேதி  மாற்றுவழியில் இயக்கப்படும் ரயில்கள்: கோவை- நாகர்கோயில் பாசஞ்சர் ரயில் ஈரோட்டில் இருந்து சேலம், நாமக்கல், வழியாக கரூர்வந்து நாகர்கோயில்செல்லும். பாலக்காடு டவுண்- திருச்சி பாசஞ்சர் ரயிலும் இதே மார்க்க்தில் வந்து திருச்சிசெல்லும். பகுதி ரத்து செய்யப்படும் ரயில்கள்: ஈரோடு-திருநெல்வேலி பாசஞ்சர் ரயில் ஈரோட்டில் இருந்து கரூர் வரை ரத்து செய்யப்படுகிறது. திருச்சி-ஈரோடு பாசஞ்சர் கரூரில் இருந்து ஈரோடு வரை ரத்து செய்யப்படுகிறது. திருநெல்வேலி -ஈரோடு பாசஞ்சர் ரயில் 35நிமிடம் கரூரில் நிறுத்தப்படும். நவம்பர் 27ம் தேதி ரயில்கள்நேரம் மாற்றம்: கோவை-நாகர்கோயில் பாசஞ்சர், பாலக்காடுடவுண்- திருச்சி பாசஞ்சர் ரயில்கள்ஈரோட்டில் இருந்து கரூர்வருவதற்கு பதிலாக ஈரோட்டில் இருந்து சேலம்,நாமக்கல் வழியாக கரூர்வந்து செல்லும். ஈரோடு-திருநெல்வேலி பாசஞ்சர், ஈரோடு-கரூர் இடையே ரத்துசெய்யப்படுகிறது. திருச்சி-ஈரோடு பாசஞ்சர், திருநெல்வேலி-ஈரோடு பாசஞ்சர், ரயில்கள் கரூர்-ஈரோடு இடையே ரத்து செய்யப்படுகிறது. நாகர்கோயில் மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் கரூருக்கும் புகழூருக்கும் இடையே 50நிமிடம் நிறுத்திவைக்கப்படும். திருச்சி-பாலக்காடு பாசஞ்சர் ரயில் 20நிமிடம் கரூரில் நிறுத்தி வைக்கப்பட்டு புறப்படும். இத்தகவலை சேலம்கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. சேலம் அகலரயில்பாதையில் மின்மயமாக்கல் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் ஏற்கனவே கரூர்-சேலம்-கரூர் பாசஞ்சர் ரயில் நவம்பர் 9ம்தேதி முதல் 23ம்தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : bridge ,railway track ,Karur ,
× RELATED பசுபதிபாளையம் பாலம் அருகே அமராவதி...