×

கரூர் அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் பாதித்த 500 பேருக்கு சிகிச்சை வெளிநோயாளிகள் கைகழுவிய பின்னரே செல்கின்றனர்

கரூர்,நவ.15: கரூர் அரசு மருத்துவமனைக்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 500பேர் சிகிச்சைக்காக வருகின்றனர். வெளிநோயாளிகள் கைகழுவிய பின்னரே வெளியே அனுப்ப படுகின்றனர்.
 கரூர் மாவட்ட மருத்துவக்கல்லு£ரி மருத்துவமனை கரூரில் செயல்படுகிறது. காய்ச்சல் பரவி வருவதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் சுமார் 500பேர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருகின்றனர். இவர்களுக்கு உரிய பரிசோதனை செய்யப்பட்டு மருந்து மாத்திரைகள் வழங்கப்படுகிறது.  இதுகுறித்து மருத்துவக்கல்லு£ரி மருத்துவமனை டீன் ரோசிவெண்ணிலாவிடம் கேட்டபோது, காய்ச்சலுக்காக வருபவர்கள் பரிசோதனைக்கு பின்னர் அறிகுறிஇருந்தால் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுகின்றனர். சுமார் 90பேர் உள்நோயாளிகளாக சிகிச்சைபெறுகின்றனர். காய்ச்சலுக்காக வருவோர் இருவகையாக பிரிக்கப்பட்டுள்ளனர். சளி, காய்ச்சல், இருமல், தும்மல், காய்ச்சல் பாதிப்புஉள்ளவர்கள் மற்றும் காய்ச்சல் என பிரித்து சிகிச்சைஅளிக்கப்படுகிறது.  பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் 3பேர், டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் ஒருவரும் சிகிச்சை பெறுகின்றனர். தேவையான மருந்து மாத்திரைகள் படுக்கை வசதி உள்ளது. தினமும் வரும் வெளிநோயாளிகள் அனைவரும் வெளியே போவதற்குமுன்னர் கைகளை கழுவ வைத்து அனுப்பப்படுகின்றனர். டெங்கு வார்டில் அனுமதிக்கப்படுவோர் தீவிர கண்காணிப்புக்குஉட்படுத்தப்படுகின்றனர். பன்றிகாய்ச்சலில் சிகிச்சை அளிக்கும் டாக்டர், நர்சுகள் கிருமி தொற்றுஏற்படா வண்ணம் ஊசிபோட்டுக்கொள்வதாக கூறினார்.

Tags : Karur Government Hospital ,outpatients ,
× RELATED ஜிப்மரில் தீ விபத்து