×

மக்களிடம் பெற்ற கோரிக்கை மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை அதிகாரிகளுக்கு தம்பிதுரை உத்தரவு

கரூர், நவ. 15: க.பரமத்தி ஒன்றியம் கோடந்தூர் ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களின் இருப்பிடத்திற்கே சென்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்ததாவது: கோடாந்தூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் 102 பணிகள் ரூ. 284 லட்சம் மதிப்பிலும், கூடலூர் மேற்கு ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் 210 பணிகள் ரூ. 266 லட்சம் மதிப்பிலும், கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் 595 பணிகள் ரூ. 633 லட்சம் மதிப்பிலும், ஆரியூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் 380 பணிகள் ரூ. 387 லட்சம் மதிப்பிலும் வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்றுள்ளது. மக்களின் நலனை கருத்தில் கொண்டு நலத்திட்டங்கள் அரசால் வழங்கப்படுகிறது. மேலும், உங்கள் பகுதிக்கு தேவைப்படும் அடிப்படை வசதிகள் குறித்து உங்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தம்பிதுரை தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, கூடலூர் மேற்கு, கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட 20க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு சென்று பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டன. நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் கவிதா, கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, தாசில்தார் பிரபு உட்பட அனைத்து அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Tags : action officers ,
× RELATED பத்திரப்பதிவுத்துறையில் அதிரடி...