வரதட்சணை கேட்டு மிரட்டல்

விழுப்புரம், நவ. 15: விழுப்புரம் அருகே இளம்பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் தவாசீன் (26). இவருக்கும், விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் முத்தமிழ் தெருவை சேர்ந்த இப்ராஹீம் மகன் ஷேக்மன்சூர் (36) என்பவருக்கும் திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ரயான் (5) என்ற மகன் உள்ளான். இந்நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஷேக்மன்சூர் விழுப்புரத்தை சேர்ந்த சயீராபானு என்பவரை 2ம் திருமணம் செய்து கொண்டதோடு, மளிகை கடை வைத்து வியாபாரம் செய்வதற்காக மனைவி தவாசீனிடம் பெற்றோர் வீட்டில் இருந்து வரதட்சணையாக நகை, பணம் வாங்கி வரும்படி கேட்டு கொடுமை செய்து வந்துள்ளார். தவாசீனிடம் நகை, பணம் வாங்கி வரும்படி கேட்டு அவரது கணவர் ஷேக்மன்சூர், மாமியார் மும்தாஜ்பேகம், மாமனார் இப்ராஹீம் ஆகியோர் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து தவாசீன், விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அதில் ஷேக்மன்சூரை கைது செய்தனர்.

Related Stories: