சுடுகாடு பாதை அமைத்து கொடுக்க வலியுறுத்தல்

உளுந்தூர்பேட்டை, நவ. 15: விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது எறஞ்சி கிராமம். இந்த கிராமம் உளுந்தூர்பேட்டை அடுத்த எடைக்கல் காவல்நிலையத்திற்கு உட்பட்ட கிராமமாக இருந்தாலும், தியாகதுருகம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமமாக உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 1500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வரும் நிலையில் ஒரு பிரிவை சேர்ந்தவர்

களுக்கு இறந்தவர்களின் சடலத்தை எடுத்துக்கொண்டு சுடுகாடு செல்வதற்கு போதிய பாதை இல்லாததால் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இறந்தவர்களின் சடலத்தை வயல்வெளிப்பகுதி வழியாக எடுத்து செல்வதற்கு அந்த பகுதியை சேர்ந்த விவசாய நிலத்தின் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் சடலத்தை எடுத்து செல்வதற்கு கடும் சிரமப்பட்டு செல்வதாக இந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் எறஞ்சி கிராமம் தியாகதுருகம் ஒன்றியத்தின் கடைகோடி கிராமமாக உள்ளதால் எத்தனை கோரிக்கை மனுக்கள் கொடுத்தாலும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பது இல்லை என குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து எறஞ்சி கிராம பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சுடுகாடு பாதை அமைத்து கொடுக்க வேண்டும் என மீண்டும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: