×

கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு முருகன் கோயில்களில் திருக்கல்யாணம்

ராமநாதபுரம், நவ.15: கந்தசஷ்டியை விழாவை முன்னிட்டு முருகன் கோயில்களில் நேற்று திருக்கல்யாண வைபவம் நடந்தது. ராமநாதபுரத்தில் வழிவிடு முருகன், குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி, வடக்குத்தெரு பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், குமரையா கோயில்களில்  கந்தசஷ்டித் திருவிழா இம்மாதம் 8ம் தேதி காப்புக்கட்டுதல் உற்சவத்துடன் தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 13ம் தேதி சூரசம்ஹாரம் நேற்று முன்தினம் (13ந் தேதி) நடைபெற்றது. முருகன் ஆலயங்களில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்ற மறுநாள்  தெய்வாணையை திருக்கல்யாணம் செய்து கொள்ளும் திருக்கல்யாண வைபவம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கோயில் சிவாச்சாரியர்கள் ஆகம விதிகளின்படி திருமணத்தை நடத்தினார்கள். தெய்வானைக்கு திருமாங்கல்யம் அணிவித்த பின்னர் கோயிலில் விழாவைக்காண வந்திருந்த சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள் கயிறு  பிரசாதமாக வழங்கப்பட்டது. திருக்கல்யாண நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை வழிபட்டனர்.

Tags : Murugan ,temples ,festival ,
× RELATED பங்குனி உத்திர திருவிழா முருகன் கோயில்களில் ஏற்பாடுகள் தீவிரம்