ஞாயிறு தோறும் படியுங்கள் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம்

ஒட்டன்சத்திரம், நவ. 15: ஒட்டன்சத்திரம் தொப்பம்பட்டி கிழக்கு ஒன்றிய கழக சார்பாக கள்ளிமந்தையத்தில் நடைபெற்ற நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடந்தது. முகாமில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளரும், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினருமான அர.சக்கரபாணி  பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார். இதில் தொப்பம்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் க.தங்கராஜ், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் பி.சி.தங்கம், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் ப.கருப்புச்சாமி, கள்ளிமந்தையம் ஊராட்சி செயலாளர் ஏ.எஸ்.கோதண்டராமன் உள்பட கழக நிர்வாகிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Related Stories: