மாவட்டம் திமுக ஆலோசனை கூட்டத்தில் முடிவு முள்வேலியில் சிக்கிய பறக்கும் அணில் உயிருடன் மீட்பு

கொடைக்கானல், நவ. 15:கொடைக்கானல் ஏரி அருகே முள்வேலியில் சிக்கிய பறக்கும் அணிலை வனத்துறையினர் உயிருடன் மீட்டனர். கொடைக்கானல் ஏரி அருகே டிவிஎஸ் பங்களா உள்ளது. இந்த பங்களாவின் பாதுகாப்பு முள்வேலியில் பறவை அணில் எதிர்பாராத விதமாக சிக்கியது. முள்வேலியில் சிக்கிய பறக்கும் அணில் உயிருக்கு போராடியது. அப்போது அந்த பகுதியைக் கடந்து சென்ற கால்டன் ஹோட்டலில் பணிபுரியும் பாண்டி இதை பார்த்துள்ளார். உடனே ஸ்மைல் அசோசியேசன் நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தார். இந்த அமைப்பின் தலைவர் ரவி மற்றும் அப்பாஸ் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். முள்வேலியில் சிக்கிய பறக்கும் அணிலை பாதுகாப்பாக மீட்டு காயம்பட்ட பகுதிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, பின்னர் வனப்பகுதிக்குள் உயிரோடு விட்டனர். உரிய நேரத்தில் எடுத்த நடவடிக்கைகளால் அழிந்து வரும் பட்டியலில் உள்ள பறக்கும் அணில் பாதுகாப்பாக உயிருடன் மீட்கப்பட்டது.

Related Stories: