காய்கறி தோட்டம் மகளிருக்கு செயல் விளக்கம்

வில்லியனூர், நவ. 14:  புதுச்சேரி வேளாண்மை துறை மற்றும் விவசாயிகள் நலன், பண்ணை தகவல் ஆலோசனை மையம் சார்பில் வில்லியனூர் அருகே உள்ள தொண்டமாநத்தம் பகுதியில் காய்கறி தோட்டம் அமைப்பது குறித்து பெண்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் வேளாண் அலுவலர் நடராஜன் கலந்து ெகாண்டு, பெண்கள் விவசாயம் செய்வது குறித்தும், இயற்கை முறையில் காய்கறி தோட்டம் அமைப்பது குறித்தும் விளக்கினார். காய்கறி செடிகளுக்கு இயற்கையான முறையில் பூச்சிகொல்லி உரம் தெளித்தல் மற்றும் பராமரிப்பு குறித்தும் விளைவிக்கப்படும் பொருட்களை எங்கு விற்பனை செய்வது குறித்தும் எடுத்துரைத்தார். பிறகு பெண்களுக்கு வீட்டில் காய்கறி தோட்டம் எவ்வாறு அமைப்பது? எவ்வாறு நடவு செய்வது? குறித்த செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து தொண்டமாநத்தம் சமுதாய நலக்கூடத்தில் பெண்களுக்கான கருத்தரங்கு நடந்தது. இதில் வேளாண் அலுவலர் சுமதி மற்றும் 50க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: