தேங்கிய சாக்கடையால் துர்நாற்றம் அதிக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்

வேடசந்தூர், நவ. 15:வேடசந்தூரில் கரூர் பாராளுமன்றத்துக்கு உட்பட்ட திமுக தொகுதி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், அதிக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. ஓட்டன்சத்திரம் எம்எல்ஏவும், மேற்கு மாவட்ட செயலாளருமான கொறடா அர.சக்கரபாணி தலைமை வகித்தார். தலைமை செயற்குழ உறுப்பினர் முன்னாள் துணை சபாநயகர் காந்திராஜன், ஒன்றிய செயலாளர்கள் சாமிநாதன், சீனிவாசன், கவிதாபார்த்திபன், சுப்பைய்யா மாவட்ட துணை செயலாளர்கள் ராஜாமணி, ஜெசிலூர்துமேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணன், நகர செயலாளர்கள் கார்த்தி, கணேசன், சம்பத், கருப்பணன், உமாசந்திரன் முன்னிலை வகித்தனர்.

Advertising
Advertising

கூட்டத்தில் மாநில துணை செயலாளர் சுப்புல்சுமிஜெகதீசன், மாநில இளைஙஞரணி துணை செயலாளர் சுபா.சந்திரசேகர் பேசினர். சுப்புலட்சுமிஜெகதீசன் பேசுகையில், பாராளுமன்ற தேர்தல் விரைவில் வருகிறது. கரூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் ஆய்வு செய்ய வேண்டும் என ஸ்டாலின் ஆலோசனை வழங்கியுள்ளார். அனைத்து இடங்களிலும் ஆலோசனை கூட்டம் நடத்துகிறோம். நம்முடைய நிர்வாகிகள் புதிய ஊறுப்பினர்களை, இளைஞர்களை, பெண்களை சேர்க்க வேண்டும்’ என்றார். வேடசந்தூர் வடமதுரை, குஜிலியம்பாறை ஒன்றியங்களில் இருந்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: