இன்று நடக்க இருந்த ஊர்வலம், மறியல் போராட்டம் தள்ளிவைப்பு

புதுச்சேரி, நவ. 15:  புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை: புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் முன்வைத்துள்ள 33 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (15ம் தேதி) அனைத்து பிரிவு ஊழியர்களும் விடுப்பு எடுத்து நான்கு முனைகளில் இருந்து பேரணியாக புறப்பட்டு சட்டப்பேரவை முன்பு மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டு இருந்தது. கஜா புயலையொட்டி புதுச்சேரி அரசு புயல் அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையொட்டி, அரசு ஊழியர்களுக்கும், பல்வேறு பேரிடர் கால நடவடிக்கைகளை எடுக்கும் வகையில் அறிவுறுத்தியுள்ளது. கஜா புயல் இன்று புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என்ற நியைில் அனைத்து பிரிவு ஊழியர்களும் பொதுமக்கள் நலன் கருதி பேரிடர்கால நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய நேரத்தில், ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கAளை முன்வைப்பது முறையல்ல என்ற நிலைப்பாட்டோடு, இன்று நடக்க இருந்த மறியல் போராட்டத்தை தற்காலிகமாக தள்ளி வைப்பது என முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: