தேசிய பசுமைப்படை பயிற்சி

திண்டுக்கல், நவ. 15: தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை மற்றும் சீட்ஸ் அறக்கட்டளை சார்பில்  திண்டுக்கல் மாவட்ட தேசிய பசுமைப் படையின் செயல்பாடுகளை  வலுப்படுத்துவதற்கான பயிற்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் அறக்கட்டளை இயக்குனர் முத்துச்சாமி வரவேற்றார். திண்டுக்கல் கோட்ட வனவிரிவாக்க அலுவலர் நவநீதகிருஷ்ணன் தலைமை வகித்தார். பயிற்சியை  திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் வித்யா தொடங்கி வைத்தார். காந்திகிராம  பல்கலைக்கழக உயிரியல் துறை உதவி பேராசிரியர் ராமசுப்பு, சிறுமலை வனச்சரக  அலுவலர் மனோஜ் ஆகியோர் கருத்துரை வழங்கினர். பயிற்சியில் மாசுபடக்கூடிய  காற்றை எப்படி தூய்மைப்படுத்துவது, மரம் வளர்ப்பு குறித்த அவசியம் என்ன,  காடும் காடு சார்ந்த வளமும், வனவிலங்கு பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு  கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டது.

இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள  நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து  பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்  130 பேர் கலந்து கொண்டனர். பழநி-தேசிய பசுமைப்படை  ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் நன்றி கூறினார்.

Related Stories: