பூதிப்புரத்தில் டெங்கு ஒழிப்பு பணிகள் தீவிரம்

தேனி, நவ.15:பூதிப்புரம் பேரூராட்சிக்குட்பட்ட பூதிப்புரம், வாழையாத்துப்பட்டி, ஆதிப்பட்டி ஆகிய உட்கிடைக்கிராமங்களில் டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசு ஒழிப்பு பணி பேரூராட்சி நிர்வாகம் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, பேரூராட்சி செயல்அலுவலர் கார்த்திகேயன் உத்தரவின்பேரில் சுகாதார பணியாளர்கள் தெருக்களில் கொசு ஒழிப்பிற்காக புகை அடிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சாக்கடைகளில் சுகாதாரப்பணி மேற்கொண்டும் வருகின்றனர். அத்துடன் வீடு,வீடாக சென்று டெங்கு பரப்பும் கொசுப்புழுக்கள் வீடுகளில் உள்ளதா எனவும் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், டெங்கு கொசு ஒழிப்பு குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர்.

பூதிப்புரத்தில்

டெங்கு ஒழிப்பு

பணிகள் தீவிரம்

Related Stories: