மாவட்டம் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு முகாம்

பட்டிவீரன்பட்டி, நவ. 15: பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், சேவுகம்பட்டி ஆகிய 3 பேரூராட்சி பகுதிகளில் நடந்த ஒருங்கிணைந்த மருத்துவமுகாம் மற்றும் துப்புரவு பணி முகாமில் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு குறித்து விளக்கப்பட்டது. பட்டிவீரன்பட்டி அய்யம்பாளையம், சேவுகம்பட்டி பேரூராட்சிகளில் துப்புரவு பணி முகாம் நடைபெற்றது. இதில் டெங்கு கொசுவை ஒழிப்பது குறித்து விளக்கப்பட்டது. மழைகாலங்களில் டயர், தேங்காய் மட்டை, ஆட்டுக்கல் மற்றும் பிளாஸ்டிக் டப்பா போன்ற பொருட்களில் தேங்கும் மழைநீரில் டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகிறது. இந்த கொசுக்கள் மூலம் டெங்கு காய்ச்சல் பரவுவகிறது. இதனால் இதனை பொதுமக்கள் தங்களது வீடுகளில் அகற்ற வேண்டும். தங்களது கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். இதனால் கிருமி தொற்றுகள் உடலில் பரவாமல் தடுக்கபடும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

பன்றி காய்ச்சல் உள்ளவர்களிடமிருந்து இருமல், தும்மல் மூலமாகவும், காற்றின் மூலமாகவும் மற்றவர்களுக்கு பரவும் இதனால் இந்த காய்ச்சல் உள்ளவர்கள் அரசு மருத்துவமனைகளில் உடனடியாக இலவச பரிசோதகளை மேற்கொள்ள வேண்டும். மருந்து கடைகளில் தாங்களாவே மருந்துகளை வாங்க பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என பொதுமக்களிடம் வலியுறுத்தப்பட்டது.பேரூராட்சி பகுதி தெருக்களில் கிடந்த குப்பைகள், தேவையில்லாத பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு அழிக்கப்பட்டது. பட்டிவீரன்பட்டி பேரூராட்சி பகுதிகளில் நடந்த இம்முகாமில் பேரூராட்சி செயல் அலுவலர் பாலமுருகன், அரசு மருத்துவர்கள் டாக்டர் கிருபாகரன், டாக்டர் ஜெய்னிசுகுமார், சித்தா டாக்டர் ராஜவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.அய்யம்பாளையத்தில் நடந்த சிறப்பு முகாமில் செயல் அலுவலர் சரவணகுமார், டாக்டர் ஆனந்தீஸ்வரி. சுகாதார ஆய்வாளர் மலையரசன், பேரூராட்சி தலைமைக்கணக்காளர் ராஜகோபால் ஆகியோர் கலந்து கொண்டனர். சேவுகம்பட்டி பேரூராட்சியில் செயல் அலுவலர் சக்திவேல், டாக்டர் ஜெய்னி மற்றும் சுகாதார பணியாளர்கள், பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: