×

தெரு நாய்களின் எண்ணிக்கை 40 ஆயிரமாக குறைந்தது

சென்னை: சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள தெருக்களில் சுற்றி திரியும் தெரு நாய்களின் எண்ணிக்கை தொடர்பான கணக்கெடுப்பு கடந்த மூன்று மாதங்களாக நடத்தப்பட்டது. இந்த கணக்கெடுப்பானது முதல் முறையாக மொபைல் செயலி மூலம் நடத்தப்பட்டது.  மாநகராட்சி ஊழியர்கள் செல்லும் இடங்களில் சாலைகளில் திரியும் நாய்களை புகைப்படம் எடுத்து அந்த செயலியில் பதிவேற்றம் செய்வார்கள்.  

இதனால் ஒரு முறை பதிவேற்றம் செய்த புகைப்படத்தை மறு முறை பதிவேற்றம் செய்ய முடியாது. இதனால் இந்த மிக துல்லியமாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பானது கடந்த மாதம்  முடிவடைந்தது.  அதன் முடிவில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தெரு நாய்களின் எண்ணிக்கையானது 40 ஆயிரமாக குறைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...