×

யமஹா ஊழியர்கள் போராட்டம் வாபஸ்: 55 நாள் பிரச்னை முடிவுக்கு வந்தது

சென்னை: கலெக்டர் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, யமஹா ஊழியர்கள் நடத்தி வந்த 55 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது. காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் உள்ள இருசக்கர வாகனம் தயாரிக்கும் யமஹா தொழிற்சாலையில் தொழிற்சங்கம் துவங்கியதால் 2 தொழிலாளர்களை யமஹா நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்தது. இதனால் தொழிலாளர்கள் இருவரையும் மீண்டும் பணியில் சேர்க்க வலியுறுத்தி போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த 9ம் தேதி நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தது. இந்நிலையில், காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மதியம் 2 மணியில் பேச்சுவார்த்தை தொடங்கியது.

கலெக்டர் பொன்னையா முன்னிலையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் சிஐடியு பொதுசெயலாளர் சௌந்தரராஜன், யமஹா நிர்வாகம் சார்பில் 3 பேர் பங்கேற்றனர். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 2 தொழிலாளர்களை யமஹா நிர்வாகம் மீண்டும் பணியில் அமர்த்துவதாக உறுதி அளித்ததை தொடர்ந்து 55 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது. இதனால், நாளை மறுநாள் முதல் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 700 தொழிலாளர்களும் பணிக்கு செல்வார்கள் என்று கூறப்படுகிறது.

Tags : YAMAHA ,
× RELATED யமஹா பைக்குகள்