நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு தமிழகம் முழுவதும்

வேலூர், நவ.15:  தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் அரசு பள்ளி மாணவர்கள் திணறி வந்தனர். இதனால் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது.

அதன்படி இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் சிறப்பு ஆசிரியர்கள் மூலம் 412 மையங்களில் நீட் பயிற்சி வகுப்புகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல் வேலூர் மாவட்டத்தில் உள்ள 22 பிளாக்குகளிலும் பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகின்றனர்.

நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வரும் தகுதியான மாணவர்கள் வரும் 30ம் தேதிக்குள் நீட்தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. www.nta.ac.in, www.ntaneet.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதில் ஓபிசி பிரிவினர் 1,400, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் ₹750 கட்டணம் செலுத்த வேண்டும். தேர்வு அடுத்த ஆண்டு மே மாதம் 5ம் தேதி நடக்க உள்ளது.இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள அரசு, நிதியுதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, விண்ணப்பிக்க நடவடிக்கை என்று பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: