×

பன்றிக்காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி பலி பொதுமக்கள் பீதி தண்டராம்பட்டு அடுத்த காம்பட்டு கிராமத்தில்

தண்டராம்பட்டு, நவ. 15: தண்டராம்பட்டு அருகே பன்றிக்காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி பரிதாபமாக இறந்தார். இதனால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.  தமிழகம் முழுவதும் டெங்கு, பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க மாநிலம் முழுவதும் கலெக்டர்கள் தலைமையில் சுகாதார துறையினர், மாநகராட்சி, நகராட்சி மற்றும் உள்ளாட்சி துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
வீடுகள், பொதுஇடங்கள், பள்ளி, கல்லூரிகளில் ஒட்டுமொத்த தூய்மை பணி நடந்து வருகிறது. மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மூலம் பொதுமக்களுக்கு டெங்கு, பன்றிக்காய்ச்சல் நோய் குறித்தும், அவை பரவும் முறை மற்றும் அதிலிருந்து பாதுகாத்து கொள்வது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. நிலவேம்பு குடிநீரும் வழங்கப்படுகிறது.

இருப்பினும் பலர் ெடங்கு, பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழப்பு சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 108 பேர் இதுவரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6 பேருக்கு ெடங்கு அறிகுறி இருந்ததால் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிசிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் நேரில் ஆய்வு செய்தார். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களை சந்தித்து, அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

அப்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இல்லை என தெரிவித்திருந்தார். இந்நிலையில் தண்டராம்பட்டு அருகே பன்றிக் காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி நேற்று காலை இறந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த காம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கந்தன்(36), தனியார் பால் பண்ணையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுமதி. இவர்களது மகன் பிரகதீஸ்(6), மகள் சவுமியா(4). அங்குள்ள பள்ளியில் சவுமியா எல்கேஜி படித்து வந்தார்.
இந்நிலையில் சவுமியாவுக்கு சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது பெற்றோர், அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் காய்ச்சல் குறைந்தபாடில்லை. இதையடுத்து நேற்றுமுன்தினம் சவுமியாவை திருவண்ணாமலை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்தபோது, சவுமியாவுக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வாணாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பன்றிக்காய்ச்சலுக்கு சிறுமி உயிரிழந்ததால் கிராம மக்கள் பீதியைடந்துள்ளனர். மேலும் கிராமத்தில் ஒட்டுமொத்த துப்புரவு பணியை ேமற்கொள்ள வேண்டும், சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து பிடிஓக்கள் மகாதேவன், பரிமேலழகன், விஏஓ வெங்கடாசலம் ஆகியோர் தலைமையில் வட்டார மருத்துவர் பாலாஜி, சேகூடலூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் பவுன்குமார் ஆகியோர் காம்பட்டு கிராமத்தில் சிறப்பு முகாமிட்டனர்.
மேலும், தூய்மை காவலர்களை வைத்து தெரு பகுதிகளை தூய்மை செய்தும், பொதுமக்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்க மாத்திரைகள் வழங்கியும் வருகின்றனர்.

Tags :
× RELATED திமுக ஒன்றிய செயலாளர், அதிமுக மாவட்ட...