சிறுமியை கடத்தி திருமணம் லாரி டிரைவர் போக்ஸோவில் கைது

இடைப்பாடி, நவ.14: இடைப்பாடி அருகே ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தி திருமணம் செய்த லாரி டிரைவர் போக்ஸோவில் கைது செய்யப்பட்டார்.சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே பக்கநாடு பகுதியைச் சேர்ந்த சிறுமி, பிளஸ்2 வரை படித்து விட்டு, வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில், இடைப்பாடி அடுத்த ஆடையூர் குண்டத்துமேடு பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவரான மாதையன் மகன் முருகன்(28) என்பவர், அப்பகுதிக்கு லோடு ஏற்றுவதற்காக சென்றபோது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த மாதம் 29ம் தேதி சிறுமி திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது தாயார் பூலாம்பட்டி போலீசில் புகார் தெரிவித்தார். அதில், தனது மகளை லாரி டிரைவர் முருகன் கடத்தி சென்றுவிட்டதாக தெரிவித்திருந்தார். இதன்பேரில், போலீசார் நடத்திய விசாரணையில் லாரி டிரைவர் முருகன் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு வான்மதி என்ற பெண்ணை திருமணம் செய்ததும், குழந்தை இல்லாததால் மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்ததும் தெரிய வந்தது.

இந்நிலையில், ஆணைப்பள்ளம் பகுதிக்கு வண்டி ஓட்டிச்செல்லும் போது குமுதாவுடன் பழக்கம் ஏற்பட்டு, ஆசை வார்த்தை கூறி அவரை கடத்திச்சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதன்பேரில், எஸ்ஐ செந்தில்குமார் வழக்குப்பதிந்து விசாரித்து ஜலகண்டாபுரத்தில் சிறுமியுடன் குடும்பம் நடத்தி வந்த முருகனை மடக்கி பிடித்தார். அவரிடமிருந்து சிறுமி மீட்கப்பட்டார். பின்னர், முருகனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், சங்ககிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து முருகனை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். குமுதா பெற்றோருடன் செல்ல மறுத்து விட்டதால், சேலத்தில் உள்ள மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்..சேலம் கிழக்கு கோட்டத்தில் இன்றுமின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்சேலம், நவ.14: சேலம் கிழக்கு கோட்டத்தில் இன்று(14ம் தேதி) மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது. சேலம் உடையாப்பட்டியில் செயல்படும் கிழக்கு கோட்ட மின் அலுவலகத்தில் இன்று(14ம் தேதி) மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது. மதியம் 3 மணிக்கு, மேற்பார்வை பொறியாளர் மணிவண்ணன் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில், கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர்கள் கலந்துகொண்டு, தங்களின் மின் சம்பந்தமான குறைகளை தெரிவிக்கலாம் என செயற்பொறியாளர் சுந்தரி தெரிவித்துள்ளார்.

Related Stories: