காடையாம்பட்டி ஒன்றியத்தில் ₹1.50 கோடி மதிப்பில் தார்சாலை பணிகள்

காடையாம்பட்டி, நவ.14: காடையாம்பட்டி ஒன்றியத்தில் உள்ள தாராபுரம் - ராக்கிப்பட்டி சாலை, செம்மாண்டபட்டி - கஞ்சநாயக்கன்பட்டி சாலை மற்றும் கொங்குப்பட்டி கிராமம் மனியக்காரனூர், மூக்கனூர், காருவள்ளி, கஞ்சநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள சாலைகள் பழுதடைந்து குண்டும், குழியுமாக மாறியது. இந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ஓமலூர் வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். முதல்வர் உத்தரவின் பேரில் காடையாம்பட்டி ஒன்றியத்தில் கிராம சாலைகளை புதுப்பிக்க ₹1.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து சாலைகள் அமைக்க பூமி பூஜை நடைபெற்றது. ஓமலூர் தொகுதி எம்எல்ஏ வெற்றிவேல் கலந்து கொண்டு புதிய தார்சாலை பணிகளை துவக்கி வைத்தார். தொடர்ந்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து, மனுக்களை பெற்றுகொண்டார். இந்நிகழ்ச்சியில் அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: