ஓமலூரில் ₹12 லட்சத்தில் நூலக கட்டிடம் திறப்பு

ஓமலூர், நவ.14: ஓமலூரில் ₹12 லட்சத்தில் புதிதாக கட்டபட்ட கிளை நூலக கட்டிடத்தை எம்பி பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். ஓமலூரில், கடந்த 1955ம் ஆண்டு முதல் கிளை நூலகம் செயல்பட்டு  வருகிறது. இந்த நூலகத்தில் 8,190 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். ஆனால்,  நூலகத்துக்கு சொந்த  கட்டிடம், அடிப்படை வசதிகள் இல்லாததால் வாசகர்கள்  சிரமப்பட்டு வந்தனர். கடந்த 10 ஆண்டுக்கு முன்பு புதிய நூலகம் கட்ட இடம்  ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், அங்கு புதிதாக கட்டிடம் கட்டப்படில்லை. இந்நிலையில், ஓமலூர் காசி விஸ்வநாதர் கோயில் அருகே, சேலம் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ₹12 லட்சத்தில் புதிதாக கிளை நூலகத்துக்கு கட்டிடம் கட்டப்பட்டது.

இதனை பன்னீர்செல்வம் எம்.பி. பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஓமலூர்  எம்எல்ஏ வெற்றிவேல், முன்னாள் எம்எல்ஏ பல்பாக்கி கிருஷ்ணன் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர். விழாவில் கூடுதல் நூலக கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க  வேண்டும் என வாசகர்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கான நடவடிக்கை  எடுக்கப்படும் என எம்எல்ஏ வெற்றிவேல் தெரிவித்தார்.

Related Stories: