திருவெறும்பூர் பெல் வளாகத்தில் புத்தாயிரம் பூங்கா ெபாலிவு பெறுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

திருச்சி, நவ. 14: திருவெறும்பூர் அருகே பெல் வளாகத்தில் பொதுமக்கள் பொழுது போக்கிற்காக உள்ள புத்தாயிரம் பூங்கா புதுப்பொலிவு பெறுமா என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.திருவெறும்பூர் பெல் குடியிருப்பு வாசிகள் மற்றும் சுற்றுவட்ட பொதுமக்களின் பொழுது போக்கிற்காக பெல் நிறுவனம் சார்பில் பெல் குடியிருப்பு வளாகத்தில 6 ஏக்கர் பரப்பளவில் பொழுதுபோக்கு பூங்கா தொடங்கப்பட்டது. இப்பூங்காவில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு போதிய விளையாட்டு உபகரணங்கள் கடந்த 2 ஆயிரமாவது ஆண்டில் அமைக்கப்பட்டது.அதனால் தான் பெல் பூங்காவிற்கு  புத்தாயிரம் பூங்கா 2000 என்ற பெயர் வந்தது. இந்த பூங்காவில் கிளிகள், பறவைகள், காதல் பறவைகள், முயல்கள், மான்கள், ராட்டினம், ரயில் உள்ளிட்ட பல்வேறு போழுபோக்கு அம்சங்களும் நிறைந்திருந்தது.

இந்நிலையில் பூங்காவில் இருந்த பறவைகள் முயல்கள் என எதுவும் தற்போது இல்லை. மேலும் குழந்தைகளின் பொழுது போக்கிற்காக அமைக்கப்பட்டிருந்த விளையாட்டு சாதனங்கள் எதுவும் இல்லை.இப்படி பூங்காவிற்கு பொழுது போக்க வரும் பொதுமக்களுக்கும், குழந்தைகளுக்கும் பொழுதுபோக்க இடம் இல்லாத நிலையில் அவர்கள் மான்களை பார்வையிடுகின்றனர். சிலர் அவர்கள் சாப்பிடும் சிற்றுண்டிகளை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் சில மான்கள் கடந்த சில நாட்களுக்கு திடீரென இறக்க தொடங்கியது. இவ்வாறு பொழுதுபோக்க முடியாமலும் பொதுமக்களுக்கும், குழந்தைகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலும் உள்ள புத்தாயிரம் பூங்காவை பெல் நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் புதுப்பொலிவு பெற செய்ய வேண்டும். அதுவரை பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள பூங்காவை தற்காலிகமாக மூட வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பெல் குடியிருப்புவாசிகள் மற்றும் பூங்காவிற்கு வரும் பொதுமக்களும் பெல் நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: