சுப்புலட்சுமி ஜெகதீசன் குற்றச்சாட்டு ஏரி, குளங்களுக்கு தண்ணீர் வழங்கி சம்பா சாகுபடி காப்பாற்ற வேண்டும்திருவெறும்பூர் மா. கம்யூ. கூட்டத்தில் வலியுறுத்தல்

திருச்சி, நவ. 14: திருவெறும்பூர் வட்டத்தில் உள்ள ஏரி குளங்களுக்கு முறையாக தண்ணீர் வழங்கி நடப்பு சம்பா சாகுபடியை காப்பற்ற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவெறும்பூர் தாலுகா கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  

திருவெறும்பூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் கணேசன் தலைமை வகித்தார். தாலுகா கமிட்டி நிர்வாகிகள் பழனிசாமி, சங்கிலிமுத்து, முருகேசன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய பொருட்கள் குறித்து தாலுகா செயலாளா நடராஜன் பேசினார். கூட்டத்தில் திருவெறும்பூர் வட்டத்தில் உள்ள அனைத்து ஏரி, குளங்களுக்கும் முறையாக தண்ணீர் அளித்து நடப்பு சம்பா சாகுபடியை காப்பற்ற வேண்டும். தமிழக அரசு அறிவித்துள்ளபடி வேங்கூர் பூசத்துறை அருகே காவிரி ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும். உரத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்தி விவசாயத்திற்கு தேவையான உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளை வழங்க வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் குறித்த காலத்தில் விவசாயிகளுக்கு கடன் வழங்க வேண்டும்.  டெங்கு. பன்றி, பறவை உள்ளிட்ட காய்ச்சல்களால் பொதுமக்கள் கடுமையாக அவதிப்படுகின்றனர். அதனை கட்டுப்படுத்த திருவெறும்பூர் வட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூடுதல் மருத்துவாகள் மற்றும் செவிலியர்களை அரசு நியமிக்க வேண்டும். அதேபோல் மருத்துவ முகாம்களையும் நடத்த வேண்டும். வேங்கூர் அருகே காவிரி ஆற்றில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளுவதற்கு அனுமதி வழங்க வேண்டும். மணல் தட்டுப்பாட்டால் வேலை இழந்துள்ள கட்டிடத்தொழிலாளர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.   இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் சுதாகர், ராமமூர்த்தி, ரவி, மாரியம்மாள், பெரியசாமி, யமுனா, தங்கவேல் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Related Stories: