கரந்தையில் டெங்கு விழிப்புணர்வு முகாம்

தஞ்சை, நவ. 14: தஞ்சை கரந்தை கீரைக்காரத்தெரு, சுஜானா நகர் குடியிருப்போர் நலச்சங்கம், இமார்த்தி கொத்தன் தெருவாசிகள் மற்றும் ஸ்ரீமகரிஷி பார்மா சார்பில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது. கீரைக்காரத்தெரு திரவுபதை அம்மன் கோயில் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு தரும.இளங்கோவன் தலைமை வகித்தார். கண்ணன், ராஜேந்திரன், உதயபாஸ்கர், செல்வம், நடராஜன், ரவிக்குமார், பொன்னியின்செல்வன் முன்னிலை வகித்தனர். தரும.கருணாநிதி வரவேற்றார். முகாமை தஞ்சாவூர் வட்ட வழங்கல் அலுவலர் மரியஜோசப் துவக்கி வைத்தார். ஓய்வுபெற்ற துணை ஆட்சியர் நிலவேம்பு குடிநீரை பொதுமக்களுக்கு வழங்கினார். மருத்துவர்கள் சிவரஞ்சனி, சீதாலட்சுமி ஆகியோர் டெங்கு, பன்றி காய்ச்சல், விஷகாய்ச்சல் குறித்து விளக்கம் அளித்தனர். மேலும் பொதுமக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனைகளை மருத்துவ குழுவினர் மேற்கொண்டனர். முகாமில் 400க்கும் மேற்பட்டவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. நடராஜன் நன்றி கூறினார்.

Related Stories: